நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் - twittor newton intro..

Leave a Comment

சுஜாதா டிபி வைத்துக்கொண்டதற்கும், நியூட்டன் என்று என்னையே புனைப்பெயரில் அழைத்துக்கொண்டதற்கும் ஒரு காரணம் இருந்தது. இணையத்தில் அறிவியல் பற்றி எழுதலாம் என்ற ஓர் எண்ணம்தான் அதன் பின்னணி. வந்த புதிதில் டிவிட்டரில் சிறு துணுக்குகளாக எழுதினேன். யாருமே கவனிக்கவில்லை. ஆள் இல்லாத டீக்கடையில் ஏன் டீ ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முதல் காரணம், தொடர்பவர்கள் குறைவு. சரி, கூட்டம் தேற்றுவோம் என்று பலவிதக் கீச்சுக்களும் எழுதினேன். வந்த காரணம் மறந்து விட்டது. “இதையே கூட்டம் சேர்க்கக் கோமாளி வேடம் போட்டேன். கோமாளி வேடமே நிரந்தரமாகி விட்டது!” என்று ஒரு முறை எழுதினேன்.

சினிமா மற்றும் பல விஷயங்களை எழுதியதில் தொடர்பவர்களின் கூட்டம் சேர்க்கும் எண்ணம் இருந்தது. அறிவியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், டிவிட்டரின் வடிவத்தில் trivia எனப்படும் குறுந்தகவல்களை மட்டுமே எழுத முடியும். குறுந்தகவல்களின் பயன்கள் மிகக்குறைவே. எளிதில் மறந்துவிடும். மற்றும் அவை பல இடங்களிலும் கிடைக்கும். அதனால், அறிவியலை ஓரளவு நீளத்தில் சிறு சிறு பகுதிகளாக எழுத விரும்புகிறேன். ஓரளவு எளிதில் புரியும் வண்ணம், பிழையில்லாமல் எழுதவேண்டும். அதே சமயத்தில் இன்றைய இணைய தலைமுறையைக் கருத்தில் கொண்டு இரண்டு பக்கங்களுக்கு மேல் மிகக்கூடாது என்பதும் குறிக்கோள்.

உறுதியுடன் தொடர முடிந்தால், உங்களின் வரவேற்பு இருந்தால், ஒரு காலத்தில் மெருகேற்றித் தொகுத்து, இவற்றை இலவச PDF புத்தகமாக வெளியிடவும் ஓர் எண்ணம் உண்டு.

இது ஒரு சிறிய முன்னுரை மட்டுமே. பதிவு இன்னும் சில மணி நேரங்களில் வருகிறது. விஞ்ஞானப் பதிவுகளை உங்கள் சுவரில் ஷேர் செய்யுங்கள். இன்டர்நெட் உபயோகிக்கத்தெரிந்த தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணவும்.
#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (0)

0 comments:

Post a Comment