கிரகனாதி கிரகணங்கள் - kamal hassan kavithaigal

Leave a Comment
கிரகனாதி  கிரகணங்கள்  அப்பாலுமே ஒரு அசஹாய சக்தி உண்டாம்ஆளுக்கு ஆள் ஒரு போளிப்பிறை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்

அதைப்பயந்ததையுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லையாம்நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்பது விதியொன்று செய்வித்ததாம்

 அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது அன்போடு ஊழ்சேர்க்குமாம்குருடாகச் செவிடாக மலடாக முடமாகக் கரு சேர்க்கும் திருமூலமாம் 

குஷ்டகுஹ்யம் புற்று சூலை மூலம் குரூரங்கள் அதன் சித்தமாம்புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம் 
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம் ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதன் நின் செயலாம் 
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு தரணி தந்து அது காக்குமாம்

நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரைப் பிளந்தபோல் அணுவையும் பிளந்து அணுகுண்டு அது செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும் பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும் பரிவான பரபிரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு(ம்) சக்தியை உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு(ம்) சக்தியை

ஆகமக் குள(ம்) மூழ்கி மும்மலம் கழி அறிவை ஆத்திகச் சலவையும் செய்
 கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று கற்பூர ஆரத்தியை

தையடா ஊசியிற் தையெனத் தந்தபின் தக்கதைத் தையாதிரு
 உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின் நைவதே நன்றநின் னை.


0 comments:

Post a Comment