Thaaiammal… kamal hassan kavithaigal

Leave a Comment

காதலின் கழி பொருளாய் பிறந்த ஒரு பிள்ளைக்கு தாலாட்டு இசைப்பது போல் மொய்த்தன ஈ கூட்டம் தொப்புள் கோடி அறுத்த கசியும் காயமே பிள்ளையின் விலாசம் தெருவில் வாழ் நாய் ஒன்று பஞ்சஅகற்றி காயம் நக்க பீ அல்லும் தாயம்மாள் குப்பை கொட்ட வந்ததினால் பிள்ளையை கண்டெடுத்தால் பெயர் வைத்து பள்ளி சேர்த்தால்



உறங்கும் தன் கந்தனுக்கு மாபெரும் கனவுகளை அவன் சார்பில் கண்டு வெயதால் பேர குழந்தையையும் கண்ணார பார்த்த பின்பு பரையொலிக்க பாடை ஏறி மண்ணோடு கலந்து போனால் தாயிற் சிறந்த கோவிலும் இல்லையாம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையாம் கந்தனின் கோவிலெல்லாம் பீ அல்லும் தாயம்மாள்



தன்னை பெற்ற கோவில் ஒன்று முதியோர்கள் இல்லம் ஒன்றில் மேல்நாட்டில் வாழ்மகன்மார் அன்பாக நிதி உதவ மும்மலமும் கழிந்து போய் தன் மலத்தில் கிடக்கும் உண்மை தாயம்மாள் மகன் அறிந்தால் தேடிபோய் வணங்கிடுவான் அவன் வளர்ந்த கோவிலிலே வழிபாட்டு முறை வேறு


அளவான குடும்பமென முக்கோண சிறையினிலே குறிப்பிடும் மனப்பாங்கு தாயம்மாள் போன்றவருக்கு எப்போதும் இருந்ததில்லை உலகத்து உருண்டை எல்லாம் யம் குடும்பம் என போற்றும் பொன்செய்யும் மன்துடையால் எங்கள் பீ அல்லும் தாயம்மாள்


அவள் மனதாலே தாய் ஆனால் கருப்பையால் மலடானால் மேல்நாட்டில் வாழ்கின்ற அவ்விட்டு தம்பி மார்கள் மனதளவில் மலடாகி பதினாறும் பெற்று வாழ்ந்தார்


0 comments:

Post a Comment