தீண்டாமையின் நிறமும் வறுமையால் உண்டான பட்டினியும்" - Shiva Chelliah

Leave a Comment
நேற்று காலை அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன்.பத்து மணிக்கு யூசுவலாக நான் கிளம்பும் நேரம்,நேற்று மணி காலை 10.15 ஆகிவிட்டது. வேலைக்கு செல்லும் Work Bag-ஐ எடுத்துக்கொண்டு குளித்து விட்டு சரியாக துவட்டாத ஈரத் தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு என் பல்சர் 150-யை ஸ்டார்ட் செய்தேன்,கோவை அவினாசி ரோடு வழியே தான் பொதுவாக நான் வேலைக்கு செல்வேன்,
பார்மா மார்க்கெட்டிங்-இல் வேலை செய்யும் எனக்கு அன்றைய அப்பாய்ன்ட்மென்ட் பீளமேடு PSG கல்லூரி அருகில் இருக்கும் ஒரு மருத்துவமையில்.பீளமேடு ரீச் ஆகி அந்த PSG கல்லூரி சிக்னலில் நின்று கொண்டு இருந்தேன்,அந்த சிக்னலில் இருந்து வலது புறம் நான் திரும்ப வேண்டும்,சிக்னலில் 15 வினாடிகள் மிச்சமிருக்கும் வேளையில் என் அருகே ஒரு குரல்,..?
"அண்ணே நவஇந்தியா சிக்னலில் என்னை இறக்கி விடமுடியுமா , யாரும் லிப்ட் தரமாட்றாங்க அண்ணே,..?"
அண்ணே என்று கூப்பிட்ட அந்த குரல் ஒரு சிறுவன்,(பெயர் கேட்கவில்லை)
ஒரு வார காலம் குளிக்காமல் அழுக்குச்சட்டையுடன் தோய்ந்து போன சோகமான முகத்துடன் கையில் ஒரு அருவாமனை,கத்தி இவற்றை சானப்பிடிக்கும் சக்கர இயந்திரம் ஒன்றை சுமந்து கொண்டு நின்றான் நெற்றியின் ஓரத்தில் வடிந்து கொட்டும் வேர்வையுடன்,
Just Rewind, ""அண்ணே நவஇந்தியா சிக்னலில் என்னை இறக்கி விடமுடியுமா , யாரும் லிப்ட் தரமாட்றாங்க அண்ணே,..?"
சரிப்பாதம்பி வா உக்காரு போகலாம் என்றேன், நான் வேலை செய்யும் இடமோ Almost வந்து விட்டது.நான் வேலைக்கு செல்ல சிக்னலில் இருந்து வலது பக்கம் திரும்ப வேண்டும்,ஆனால் அவன் கேட்கும் இடமோ இங்கிருந்து நேராக செல்லும்போது வரும் இரண்டாவது சிக்னல், வெறும் 1.5 கிலோமீட்டர் தான் இருக்கும், சரி நம்ம லேட்டா போனாலும் நம்மல கண்காணிக்க ஆள் இல்ல,மார்க்கெட்டிங் வேலைல நாங்க போறது தான் டைம் பல நேரங்களில்,
சிவப்பு நிற சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியது,வண்டியை இயக்கினேன்,போகும் வழியில் பின்னால் இருந்த அந்த சிறுவன்,"சானப்பிடிக்குறதுக்கு கோயம்புத்தூருல வேலை இருக்குமா அண்ணே..?, இந்த சானப்பிடிக்குற சக்கரத்த தூக்கிட்டே சுத்துறேன்.வேலையே இல்ல,சொந்த ஊரு பரமக்குடி பக்கத்துல,ஏழாது வர படிச்சேன். அப்பா அம்மா இரண்டு பெரும் இறந்துட்டாங்க,அனாதையா எங்க போக தெரியாம இங்க வந்தேன், சானப்பிடிக்க தெரியும் ஆனா வேலையே இல்ல, சாப்பிட கூட காசு இல்ல ரொம்ப பசிக்குது அண்ணே, உங்களுக்கு எதாவது சானப்பிடிக்குற வேலை எங்க இருக்கும்னு தெரியுமா..? என்றான்.
குறிப்பு : அவன் உணவில்லாமல் பட்டினியில் தவித்த வேளையிலும் எனக்கு காசு கொடுங்கள் என்று என்னிடம் கேட்கவில்லை,சாப்பிடுவதற்கு ஒரு வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டான்.
நான் வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும் போது பின்னால் அமர்ந்து அவன் சொல்லிய இந்த விஷயங்களை கேட்டுக்கொண்டே வந்தேன், என் கண்களில் மிதமான கண்ணீர் தேங்கிய நிலையில் நின்றது,
வண்டி ஒட்டிக்கொண்டு அவன் வாழ்கையை கேட்டுகொண்டே செல்லும்போது என்னுடைய மைண்ட்டில் ஓடிய விஷயங்கள், "நமக்கும் ஐந்தாவது படிக்கையில் அப்பா தவறினார்,ஏழாவது படிக்கையில் அம்மா தவறினார், ஒரு வேலை என் சித்தி பாட்டி மாமா இவர்கள் இல்லை என்றால் நானும் ஒரு வேலை கால் போன போக்கில் ஏதோ
ஒரு ஊரில் இதே போன்று ஒரு சிக்னலில்
அழுக்குச்சட்டையுடன் பட்டினியாகவோ இல்லை
ஒரு வேலை சாப்பாட்டிற்காக பிச்சை எடுத்து இருப்பேனோ..? என்று தோன்றியது,
அவன் கேட்ட நவ இந்தியா சிக்னல் வந்து விட்டது. "அண்ணே இங்க இறங்கிக்குறேன் என்றான்" சரிப்பா என்று வண்டியை நிறுத்தி விட்டு என் Wallet-இல் தற்சமயம் இருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களில் ஒரு நூறு ரூபாயை அவனிடம் இந்த தம்பி வச்சுக்கோ, எனக்கு சானப்பிடிக்கும் வேலை எங்கு இருக்கும் என்று தெரியாது ஆனால் இந்த நூறு ரூபாய் வைத்துக்கொண்டு பக்கத்துல எதாவது ஹோட்டல்ல இட்லி தோசை-னு எதாவது சாப்பிடு பா என்றேன்,(ஏதோ அந்த சூழ்நிலையில் என்னால் முடிந்தது அவனது இரண்டு வேலை பசி போக்க),ரொம்ப நன்றி அண்ணே என்று நான் கொடுத்த நூறு ரூபாய் தாளை தன் சட்டை பையில் வைத்துக்கொண்டு நவ இந்தியா சிக்னலில் இன்னொரு நபரிடம் என்னை இன்னொரு இடத்தில் இறக்கி விடமுடியுமா? என்று கேட்டான், அதெல்லாம் இறக்கி விட முடியாது போடா என்று விரட்டி விட்டார் அவன் அழுக்கு தோற்றத்தை கண்டு,
மறுபடியும் சிவப்பு நிற சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதும் அங்கிருந்து விடைபெற்றேன் வண்டியில் 60 கிலோமீட்டர் வேகத்தில்,


"பின்குறிப்புகள்" : கீழே !
இன்னொரு நபர் அதெல்லாம் இறக்கி விட முடியாது போடா என்று அவன் அழுக்கு தோற்றத்தை கண்டு விரட்டியடித்தது, அந்த சிக்னலில் சிவப்பு நிறத்தில் தீண்டாமையை தலை தூக்க செய்தது,
அதே முந்தைய சிக்னலில் அவன் என்னிடம் கேட்டவுடன் நான் அவனை என் வண்டியில் ஏற்றிக்கொண்டு வா தம்பி என்று சொல்லி அந்த சிக்னலில் இறக்கி விட்டது, தீண்டாமை தலை தூக்கிய அதே சிக்னலில் பச்சை நிறத்தில் அவனின் பட்டினிக்கு ஒரு பசுமையான உணவு நூறு ரூபாய் வழியே கிடைத்தது.



writer = Shiva Chelliah


0 comments:

Post a Comment