நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (5) - twittor newton

Leave a Comment

TRAPPIST - Part 4 of 4

(TRAPPIST பற்றிய பதிவின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். முந்தைய பதிவுகளைக்காண
#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் என்ற tag-கைக் க்ளிக் செய்யுங்கள். நன்றி)
.
.
சரி, TRAPPIST போன்ற கோள் அமைப்புக்களைக் கண்டுவிட்டால் நாம் அங்கு குடிபோக முடியுமா என்றால், அடுத்த பிரச்னை தூரம்.
.
.
கோள் காட்டிகள் கண்டு பிடிக்கும் பல கோள்களும் பூமியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளன. உதாரணத்துக்கு, விமானத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு நாளுக்குள் சென்று விடலாம். ராக்கெட்டின் உச்ச வேகத்தில் சென்றால், இருபது நிமிடங்களில் செல்லலாம். TRAPPIST அமைப்புக் கோள்களுக்கு, விமானத்தில் சென்றால் 44 மில்லியன் (4 கோடி) வருடங்களாகும். ராக்கெட்டின் உச்ச வேகத்தில் சென்றால் கூட ஏறத்தாழ மில்லியன் (~9.5 லட்சம்) வருடங்களாகும். ஒளியின் வேகத்தில் சென்றால் 39 வருடங்களாகும். (ஒளியின் வேகம் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் பூமியை ஏழெட்டு முறை சுற்றிவருவதற்கு ஒப்பான வேகம்).
.
.
சில உபரித்தகவல்கள்: (விரும்பாதவர்கள் அடுத்த பத்திக்குத் தாவலாம்) நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டு இன்னும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிடப்படாத சில கோள்கள் உள்ளன. அவற்றின் தூரம் ஒளியின் வேகத்தில் சென்றால் 26,745 வருடங்கள் ஆகும் OGLE, 3200 வருடங்கள் ஆகும் HATS-12 போன்ற அமைப்புக்கள். 2016இல் கண்டுபிடிக்கப்பட்ட Proxima b என்ற கோள் மட்டுமே, பூமிக்கு மிக அருகில் (அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் நான்கு வருடத்தில் செல்ல முடியும்) இருக்கும் கோள்.
.
.
விஞ்ஞான வெளியீடுகள் பல இந்த ரீதியில் அமைவது சாதாரணம். ஒரு கண்டுபிடிப்பு நிகழ்கிறது. அதனால், “A” சாத்தியம். அந்த “A”னால் B சாத்தியமாகும் என்கிற extrapolations மற்றும் பில்டப் இருக்கும். அதாவது, என் குழந்தை அழகாகப் பாடுகிறான். அவன்தான் அடுத்த எஸ்.பி.பி என்கிற ரேஞ்சுக்கு இருக்கும். அதுவும் பொதுவாக “Nature” magazine போன்ற அறிவியல் வெளியீடுகளில் (scientific journals) இது அதிகமாகவே இருக்கும். இது பத்திரிகைத்துறை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.  விஞ்ஞானிகள், அவர்கள் சார்ந்த விஞ்ஞானக் கூடம் எல்லா(ரு)ம் இதில் அடக்கம். சிலவேளைகளில், விஞ்ஞானிகள் கணித்த வழி நடக்கும். சில வேளைகளில், அஞ்சான் லிங்குசாமி போன்று விஞ்ஞானிகள் பல்ப் வாங்குவதுமுண்டு.
.
.
நானும் (பேய் என்று சொன்னது பொய் என்று Pizza படத்தில் வருவதுபோல்), வாசிப்பவர்களுக்கு ஒரு சுவாரசியம் வரவேண்டும் என்பதற்காகச் சொன்னேனே தவிர, ஒரு கோளைக் கண்டுபிடித்து நாம் அங்கே சென்று குடியேறும் நாள் வெகு வெகு வெகுதூரத்திலேயே இருக்கிறது. விஞ்ஞானிகளின் தற்போதைய முக்கிய நோக்கம் உயிர் வாழத் தகுந்த வேறு கிரகங்களைக் கண்டறிவது மட்டுமே. “பூமிக்கு மிக அருகில்” என்று ரியல் எஸ்டேட்காரர்கள் “நம் காலத்தில்” கல்லாக்கட்ட வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும்.
.
.
முடிவுக்கு வருமுன் பதிவின் ஒரு பதிவின் எல்லா ஓட்டைகளையும் அடைக்கவேண்டும். இந்தப் பதிவின் ஆரம்பத்தில் கூறிய சிங்கப்பூர் இளம்தம்பதியின் பழைய வீட்டை வாங்கியவன் என்ன செய்வான் என்ற கேள்வி உங்கள் மனதில் ஓடியிருக்கும். சரியா? (இல்லை என்றால் இந்தப்பத்தியின் முதல் வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு இங்கு தொடரவும் ->) பழைய வீட்டை வாங்கிய அவனும் அந்த வீட்டைப் புதுப்பித்துக் குடி புகுந்து வாழ்வான். அல்லது, தனக்குப் பிடிக்காவிட்டாலும் கூடன்குளம், மீத்தேன் திட்டம், எXXபாX போன்ற திணிக்கப்பட்ட விஷயங்களை சகித்துக்கொண்டு வாழும் தமிழன் போல் இருப்பதை வைத்துச் சகித்துக்கொண்டு வாழ்வான்.
.
.

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (5)

0 comments:

Post a Comment