கல்வி வளர்க்கும் அறிவு(?)

Leave a Comment

  நீண்ட நாட்களாக எழுத மறந்திருந்ததால் பேனா துரு பிடிக்க ஆரம்பித்து விட்டது. எனவே அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்திலாவது நான் அதை எழுத வைக்க வேண்டி உள்ளது

நான் அடிக்கடி வலைப்பூ மூலம் எழுதி வருவது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக அறிகிறேன்.உங்களுடைய இந்த வேதனையை போக்க சரியான ஒரு தீர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. மன்னித்து கொள்ளுங்கள்

இரு தினங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் தனது தேர்வு குறித்து புலம்பிக் கொண்டிருந்தான். எவ்வளவோ ஆறுதல் கூறியும் அமைதி அடைய முயலவில்லை

வாழ்க்கையை வாழ்வது என்பது நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்றது.என்ன ஒரு வித்தியாசம் அது ஆள் அரவமற்ற பாதை.அந்த வாழ்க்கைச் சாலை எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என அறிவது சற்றே கடினமான ஒன்று தான்
வாழ்க்கைப் பயணத்தில் தொடக்கத்தையும் முடிவையும் பிறப்பு இறப்பு எனக் கொள்ளலாம் அல்லவா! தொடக்கத்தைப் பற்றிய அறிவைக் கூட பலர் பெற்றிருக்கலாம்

என்றைக்குமே சாலைகள் நேர் கோட்டில் நகர்ந்ததில்லை.சாலைகளைப் போன்றே வாழ்க்கையும் ஒரே நேர்கோட்டில் செல்வதில்லை. பல வளைவுகளும் நெளிவுகளும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும்.

சாலைகள் அழகிய பூஞ்சோலை வழியாகவும் செல்லலாம். வெஞ்சுரத்தினூடேயும் நுழையலாம். அடர்ந்த கானகத்திலும் பலமிக்க பிரவாகத்திலும் பாய்ந்து செல்லலாம். பயணங்கள் பெரும்பாலும் சூழ்நிலை குறித்து தடை பெறுவதில்லை. ஒருவேளை தடை பெற்றால் தம்முடையது மட்டுமன்றி மற்றையோரின் பயணங்களும் தேக்கப்பட்டு விடுகின்றன.

நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளும் ஒரு காரியம் தான் தேர்வு என்பதின் அடிப்படை வரையறை. ஒரு சாலையில் வரும் நாற்கர சந்தியை தேர்வுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.பயணம் இடைநில்லா பயணமாக தொடர ஒரு வழியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு.நாம் தேர்வு செய்யும் பாதையின் முடிவு அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. சாலைகள் எத்திசையில் வேண்டுமானுலும் செல்லலாம்.ஆனால் அதன்.முடிவு பெரும்பாலும் ஒன்றானதானதாகவே இருக்கும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் “எல்லாச் சாலைகளும் ரோமாபுரியைச் சென்றடைகின்றன.”

நமது நாட்டில் வீணான பழக்கம் ஒன்று இருந்து வருகிறது. அறிவை அவர்களது பள்ளி கல்லூரி மதிப்பெண்கள் கொண்டு நிர்ணயிக்கின்றனர். பத்தாம் வகுப்பில் சிறந்தவன் பன்னிரண்டில் ஜொலிப்பதில்லை. இரண்டிலும் ஜொலிப்பவர்கள் Engineering கல்லூரி வந்து ஜொலிப்பதில்லை. மூன்றிலும் சிறப்பவர்கள் இருந்ததில்லை

Fixed beam ற்கு Bending Moment கண்டுபிடிப்பதால் தான்,’L ‘ section ற்கு பதில் ‘I’ section எடுப்பதால், Circumferential stress கண்டுபிடிக்காமல் போவதால் உலகம் போற்றும் அறிவு கிடைக்காமல் போகும் என்றால் அந்த உ.போ.அறிவு தேவையில்லை

பொன் கார்த்திகேயன்

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

0 comments:

Post a Comment