Speed of light & black hole

Leave a Comment

வெகு நாட்களாக எனது பதிவுகளைப் படித்து வந்த நண்பர்கள் முனிவனைப் போல தத்துவங்கள் பொழிகின்றாயே என கூறுகின்றனர், நன்றி.நானும் நீண்ட நாட்களாக வேறு ஏதாவது எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். முதன் முறையாக அறிவியல் சார்ந்த பதிவு ஒன்றை எழுத விழைகின்றேன். ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள்,எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

எல்லையற்று விரிந்த இந்த பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை என்பது மிக அற்பமான ஒன்று தான்.எண்ண இயலா இரகசியங்கள் இந்த பேரண்டத்தில் மறைந்துள்ளன. நம் கற்பனைக்கு எட்டாத பல செயல்கள் நம்மை அறியாமலே நம் முன்னே அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
பேரண்டம் -Galaxy
நாம் வாழும் சூரியக் குடும்பம் பற்றி பள்ளிப் பருவத்திலிருந்தே அறிந்ததே. அனைத்து கோள்களின் இயக்கமும் மையத்திலிருக்கும் சூரியனைப் பொறுத்தே அமைகின்றன. ஆனால் அகன்ற இந்த பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பமும் ஒரு சிறு துகளுக்கு ஒப்பானது தான்

பூமி சூரியனை சுமார் 1500 Km/hr வேகத்தில் சுற்றுகிறது.சூரியன் பால்வெளி அண்டத்தை 108000 Km/hr வேகத்தில் சுற்றி வருகிறது.பால்வெளிஅண்டம் பேரண்டத்தை 7 million Km/hr வேகத்தில் சுற்றி வருகிறது.

பால்வெளி -Milky way

மனிதன் தான் அறிந்த இயற்கை காரணிகள் பலவற்றில் அவற்றின் வேகங்களுக்காக சிறப்பு பெறுபவை ஒலியும் ஒளியும் தான்.ஒலியின் வேகம் அறை வெப்பநிலையில் 343 தான்.இன்று ஒலியை விட வேகமாக பயணிக்கும் வான ஊர்திகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஒளியின் வேகம் அபாரமாக ஒலியின் வேகத்தை விட ஒரு இலட்சம் மடங்கு அதிகமானது.
ஒளி-light
ஒலி-sound
ஒளியின் வேகம் மிக அதிகமாக காற்று மற்றும் வெற்றிடத்தில் 3 * 10^8m/s ஆகும்.அறிவியலில் பயன்படுத்தப்படும் மாறிலிகளில் மிகப் பெரியது இதுவே.(மிகச் சிறியது பிளாங் மாறிலி 6.626 * 10^-34 Js) .ஒவ்வொரு ஊடகத்திலும் ஒளியின் திசைவேகம் அந்த ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து குறைகிறது.
மாறிலி-constant
ஒளிவிலகல் எண்-refraction index

மனிதன் இதுவரை செய்த ஆராய்ச்சிகளின் மூலம் 99.9% வரையிலான ஒளியின் வேகத்தை அடைய இயலும். எஞ்சிய வேகத்தை பெற இயலாது.ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கையும் அதுவே. “எந்த ஒரு பொருளின் வேகமும் ஒளியின் வேகத்தை அடைய இயலாது
சிறப்பு சார்பியல் கொள்கை -relativity theory
ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் சென்றால் அதன் எடை ஈறில்லா மதிப்பாக இருக்கும்,இதுவும் சிறப்பு சார்பியல் கொள்கை.தற்போது ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய வேகத்தை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப் பட்டு வருகின்றன. அது எவ்வாறு சாத்தியமாகும்? சாத்தியமானால் சிறப்பு சார்பியல் கொள்கை தவறாகி விடுமல்லவா?
ஈறில்லா மதிப்பு -infinity
கருந்துளை என்பது இன்று பரவலாக விவாதிக்கப் பட்டு வருகின்றது.கருந்துளை­ என்பது அதிக ஈர்ப்பு விசை கொண்ட மையம். அதின் ஈர்ப்பு விசையால் ஒளி கூட உறிஞ்சப் பட்டு விடுகின்றன. அதனாலே ஒளியற்ற அப்பகுதி இப்பெயர் பெற்றது.உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு விசை என்பது மிக முக்கியமானது. பூமியில் தற்போது உள்ள ஈர்ப்பு விசையை விட பத்து மடங்கு அதிகமானாலே கட்டிடங்கள் உட்பட அனைத்தும் நொறுங்கிவிடும். சூரியனின் ஈர்ப்பு விசையால் கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன. கருந்துளையின் ஈர்ப்பு விசை 2.5 மில்லியன் சூரியன்களுக்கு சமமானது. அதனாலேயே அதன் வழி செல்லும் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுகின்றன,ஒளி உட்பட.
கருந்துளை -black hole
அப்படி அதிக வேகத்தில் இழுக்கப் படும் போது ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய வேகம் பெறப்படுகிறது. இங்கு சார்பியல் கொள்கை தவறாவதை கவனிக்கலாம்
நிறையும் காலமும் மாறாததாகவே கொள்ளப்பட்டு வந்தன.ஆனால் பொருள் பயணிக்கும் வேகம் அதிகரிக்கும் போது மேற்குறிப்பிட்டவையும­் மாறியாகி விடுகின்றன. காலம் மாறுவதால் வயதும் மாறுகிறது. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே கருந்துளைகள் இருந்துகொண்டு தான்இருக்குன்றன.ஒவ்வ­ொரு கருந்துளையும் பல பேரண்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.அதாவது மிகப் பெரிய யானையை சிறிய பெட்டிக்குள் அடைப்பது போன்றது.நாட்கள் செல்லச் செல்ல பெரு வெடிப்புக் கொள்கைக்கு இட்டுச் செல்கின்றன. இது புதிய பிரபஞ்சங்கள் தோன்ற வழி வகுக்கின்றன.
பெரு வெடிப்புக் கொள்கை -Big bang theory

இன்னொரு கேள்வி எழும் ஒரு வேளை கருந்துளையினுள் நுழைந்து விட்டால் மறுபுறம் எப்படி இருக்கும்? அதற்கான பதில் உங்களை சுற்றி இருக்கும் இடங்களை சற்றே நோக்குங்கள்


பொன் கார்த்திகேயன்

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

0 comments:

Post a Comment