#மா_சண்முகராஜ் என்னிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு என்னுடைய பதிலும்!
1) உங்களுக்கு பெயர் வைத்தது யார்?
▶வேண்டுதலின் காரணமாக குருசாமி கோவிலில் குரு என்ற இணைப்பெயருடன் சேர்த்து வைக்கப்பட்டது இந்தப் பெயர். கோவிலின் பூசாரி வைத்த பெயர்.

2) உங்களுக்கு மிகப் பிடித்த பெயர்?
▶என் பெயர் தான். என் பெயர் மேல் எனக்குக் கொஞ்சம் கர்வம் கூட இருந்தது. அத்தனை தனித்துவமான பெயர். வலைதளங்களில் வந்த பிறகு என் பெயர் கொண்ட பலரை அறிந்துகொண்டேன். ஆனால் இன்னமும் என் பெயர் உள்ள ஒருவரை நேரில் பார்த்ததில்லை.

3) உங்கள் கையெழுத்து பிடிக்குமா?
▶கையெழுத்துக்காகவே மதிப்பெண் பெறும் மாணவனாக இருந்த நான் கையொப்பம் இட மட்டுமே பேனாவைப் பிரயோகிக்கிறேன். நிறைய எழுத ஆசை.

4) நீங்கள் வேறு யாரோவாக ▶இருந்தாலும் உங்களுடன் நட்பு கொள்ள உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது. எளிதில் எவரையும் கவர்ந்துவிடும் எனக்கு அவர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வது மிகக்கடிது. கடவுளின் கேவலமான கேரக்டரைஷேஷன் நான் என்பது என் கருத்து.

5) ஒருவரைப் பார்க்கும்போது அவரிடம் முதலில் எதை கவனிப்பீர்கள்?
▶பெண்ணா, ஆணா? இரண்டிற்கும் என்னளவில் வேறுபாடுகள் உண்டு. பொதுவாக கண்கள்.

6) உங்களிடம் உங்களுக்கு பிடித்தது? பிடிக்காதது?
▶பிடித்தது என் சிரிப்பு, எழுத்து, கண்கள். பிடிக்கதது நான் சிரிக்கும்பொழுது வசீகரமாக இல்லாதது. பாடுவதென்றால் அத்தனை பிரியம் எனக்கு. வெறுமனே எல்லா பாடல்களையும் பாடி ரெக்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்புவது வழக்கம். அவர்கள் ஏகோபித்துப் பாராட்டும் என் குரல் நான் கேட்கும்பொழுது டம்மியாகத் தெரிவது எனக்குப் பிடிக்காது. வெறுப்பே வந்துவிடும். பாடும் ரசனை நன்றாக இருந்தாலும் நல்ல இசையைக் கேட்டுக் கேட்டு அதை கேட்கும் ரசனை ஓவர்டேக் செய்வதாகவே படுகிறது.

7) இப்போது என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?
▶அனல் தகிக்கும் வெய்யிலில் மரத்தடி நிழல் தேடி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

8) உங்கள் பக்கத்தில் இப்போது யாரில்லையென்று வருத்தப்படுகிறீர்கள்? யாரில்லையென்று சந்தோஷப்படுகிறீர்கள்?
▶என்னைப் பொருத்தவரையில் என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். புரியாமல் போனவர்கள் பற்றிக் கவலைப் படுவது இல்லை. அதுவே சந்தோஷம் பற்றிய காரணிக்கும்.

9) நீங்கள் இப்போது யார்ப் பக்கத்தில் இல்லையென்று வருத்தப்படுகிறீர்கள்?
▶8வது கேள்விக்கான பதிலைப் படிக்கவும்.
▶8வது கேள்விக்கான பதிலைப் படிக்கவும்.
10) திடீரென்று நீங்கள் ஒரு வண்ணமாக மாற விரும்பினால் என்ன வண்ணமாக மாறுவீர்கள்?
▶இப்போதிருக்கும் இதே கருப்பு நிறம் தான். கருப்பாக இருப்பதில் பெருமை கொள்ளும் வெகு சிலருள் ஒருவன் நான்.

11) உங்களுக்கு மிகவும் பிடித்தவொரு மணம் எது?
▶ஈர மண்ணிலிருந்து எழும் வாசம், பெட்ரோலின் வாசம், அசைவ உணவுகளை சமைக்கையில் எழும் வாசம்.

12) மிக நெருங்கிய நண்பர்?
▶ஒருவர் தான் என்றால் 'சந்துரு'. பலர் என்றால் பட்டியலின் நீளம் லங்கையில் பற்றி எரிந்த அனுமார் வாலுடன் ஒத்தது.

13) கடைசியாக எந்த புத்தகம் படித்தீர்கள்?
▶என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுதாக படித்து முடிப்பதில்லை. சாருவின் 'ஸீரோ டிகிரி' எடுத்துக் கொஞ்சம் படித்தேன். தொடர்ந்து படிக்க நேரம் கூடிவரவில்லை. கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' படிக்க ஆரம்பித்தேன். முதல் பக்கம் படிக்கவே எனக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றுகிறது. இவர்கள் தமிழில் தான் எழுதுகிறார்கள் என்றால் தமிழ் புரியாத அளவு தர்த்தியாக இருக்கிறேனா என குழப்பம் அதிகரிக்கிறது. சிறுகதைகள் என்றால் படிப்பதில் ஆர்வம். அகிலன் தொகுத்த சிறுகதைகளில் 'இவன்' படித்தேன். 'ஜெயந்தன்' எழுதியது. ரா. பார்த்திபன் இதைப் படித்திருக்கலாம்.

14) மிகப் பிடித்த பருவகாலம்?
▶மிதமான குளிர்காலம்
▶மிதமான குளிர்காலம்
15) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
▶பிடித்த சத்தம், இசை என்ற பரிமாணத்தில் வரும் எல்லா சத்தமும், பெண்களின் முணகல். பிடிக்காதது அழுகை சத்தம்( யாருடையதாக இருந்தாலும் ).

16) உங்கள் செல்ஃபோனில் எதை ரிங்டோனாக வைத்துள்ளீர்கள்?
▶கான் மேன் தீம் - மாஸ்
▶கான் மேன் தீம் - மாஸ்
17) கடவுள் பற்றி?
▶இந்த விஷயத்தில் நான் தலைவன் 'எஸ்.ஜே. சூர்யா' வின் வழி( இருக்கு ஆனா இல்ல ).

18) உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்?
▶உலகமயமாதல்( க்ளோபலைஷேஷன் )
▶உலகமயமாதல்( க்ளோபலைஷேஷன் )
19) வாழ்க்கையை பற்றி?
▶வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்.
▶வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்.
20) சொல்ல மறந்த நன்றி?
▶நெருங்கிய நண்பர் ஒருவர். பெயர் சொல்ல விருப்பம் இல்லை.

21) கேட்க மறந்த மன்னிப்பு?
▶என்னிடமே. பல விஷயங்களுக்காக.
▶என்னிடமே. பல விஷயங்களுக்காக.
22) பிடித்த தத்துவம்?
▶'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே' பாடலின் மொத்தமும். வாழ்க்கையையே புரட்டிப் போட்ட தோசை சட்டுவம் அது.

23) கடைசியாக எப்போது சிரித்தீர்கள்?
▶இரண்டு நிமிடங்கள் முன்பு. நண்பர் ஒருவர் "12 ஆப்பிள்களில் ஒரு ஆப்பிள் எடை அதிகமான ஆப்பிள். அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?", என்றார். "ஒவ்வொன்னா தின்னுப் பார்த்து எதை சாப்பிட்டா வயிறு நிறையுதோ அதுதான் வெய்ட்டான ஆப்பிள்!", என்று நானே ஒரு மொக்கை பதிலை நானே கூறி கெக்கபெக்கே என சிரித்துக் கொண்டேன். விடை என்ன என்பதை முன்னமே தெரிந்து வைத்திருந்ததால்.

24) கடைசியாகச் சொன்ன பொய்?
▶பொய் சரளமாக சொல்லத் தெரியாது. ( இது பொய் இல்லை )

25) நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பும் நபர்?
▶யுவன், இளையராஜா
▶யுவன், இளையராஜா
0 comments:
Post a Comment