ஊர்ந்து கொண்டிருக்கும் ஊர்தியில் சொந்த ஊருக்கு உறங்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.இரயில் வண்டியின் கடகட ஒலியும் குலுக்கல்களும் ஊர் பற்றிய நினைவுகளும் என் விழிகளை நித்திரை கொள்ளச் செய்யாமல் பற்பல எண்ணச் சிதறல்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. நீண்ட காலம் சொந்த ஊர் பக்கம் செல்லவில்லை,நண்பர்களை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது.நான்கு மாதங்களில் நன்கு முறை கூட போன் செய்யவில்லை.அதற்காக பல கெட்ட வார்த்தைகளை கேட்க நேரிடலாம்.ஏற்கனவே கேட்டுப் பழகியது தான் பிரச்சனை இல்லை
என்னதான் பல ஊர்களில் சுற்றி பற்பல அனுபவங்களை பெற்றிருந்தாலும் ஒருவனுடைய மனம் லயித்திருப்பதென்பதோ அவனது சொந்த மண்ணில் தான்.ஊருக்குள் இருக்கும் போது இதெல்லாம் ஒரு ஊரா? நான் கோயம்புத்தூரில் படிக்கப் போகிறேன் என சுற்றித்திரிந்த நாட்களும் உண்டு.அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் எனது மகிழ்ச்சி இழப்பேன் என்று.
ஒன்றாம் வகுப்பில் ஒன்றாகத் திரிந்த அனுபவமும் பைக் டையரையும் நூங்கு வண்டியியை ஓட்டிக் கொண்டு ஓடியதும் ஐயன் கோவில் திருவிழாவும் வடக்குத் தெருவுடனான அதிகாரப் போட்டியும் நாம் நடத்திய மட்டைப்பந்து போட்டியும் அதில் வடக்குத் தெருவை தோற்கச் செய்ய தீட்டிய திட்டங்களும்
மனக்கண் முன்னே ஓடிக் கொண்டிருக்கின்றன பல நாட்களை பல யுகங்களாக கடந்த எனக்கு இந்த சில மணி நேரங்கள் நூறாயிரம் யுகங்களாக காட்சியளிக்கின்றனவே.எப்படியும் நாளை சூர்யோதயம் எனக்கு என் நெல்லை மண்ணில் தான்.காத்திருக்கிறேன் விடியலை நோக்கி

பொன் கார்த்திகேயன்
0 comments:
Post a Comment