வரலாறு கற்க

Leave a Comment
தமிழ் பண்பாடு மிக நீண்ட நாகரிகம் உடையது. இது தான் அது தோன்றிய ஆண்டு என குறிப்பிட்டுச் சொல்ல இயலா அளவு அகவை கொண்டு மார்க்கண்டேயனைப் போல் என்றும் இளமையோடு விளங்குவது.
               தற்போது இருக்கும் சூழலில் பலரும் (குறிப்பாக இளைஞர்கள்) மேற்கத்திய கலாச்சாரத்தையே நாடுகின்றனர்.ஏனென்றால் அது மட்டுமே உயர்ந்தது எனவும் மற்றையன பழையது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.
               நம் முன்னோர்கள் காலங்காலமாக கொண்டாடிய பல விழாக்கள் மறைந்தே போய் விட்டன.சில மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவற்றை கடைபிடிக்கும் சூழலில் இந்த அவசர உலகம் இல்லை.மறைத்து போன நம் பழக்க வழக்கங்களை மீளக் கொணர்வது எப்படி?
               இப்போதைய சூழலில் காலங்கடந்து செல்வது என்பது இயலா ஒன்று.
ஒரு வேளை எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.எதுவும் நிச்சயமில்லை.
எனினும் நமக்கு நம் முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வதென்பது அத்தியாவசியமானது இன்றியமையாததும் கூட
ஒரு சிலர் முன்னோர் என்பது தம் தாத்தா பாட்டியை குறிக்கப்பயன்படும் சொல் என கருதுகின்றனர்.தமிழ் மண்ணில் பிறந்து மறைந்தவர்கள் அனைவரும் நம் முன்னோர்களே!
இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கான வழி இழந்தவற்றை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வது தான்.அதற்கான ஒரு எளிமை கலந்த சற்று கடினமான வழி கல்வெட்டுக்களை நாடுவது தான்.கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவில் சுற்றுச்சுவர்களில் காணப்படுகின்றன.அவை முறையே அக்கோவிலை எடுப்பிச்சவர் பற்றியும் அவர்தம் புகழ் பற்றியும் கோவிலில் நடைபெற வேண்டிய பூஜைகள் பற்றியும் கோவிலுக்கு வழங்கப்பட்ட தான தர்மங்கள் பற்றியும் இயம்புகின்றன.
இந்தியாவெங்கும் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளை விடவுந் தமிழகத்துல் கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
இன்று பல கோவில்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது.பல கோவில்கள் அழிந்து விட்டன.
தஞ்சை தளிக்குளத்தார் கோவில்
பல அழிந்து கொண்டிருக்கின்றன
உதாரணம் -பழுவூரில் 1100 ஆண்டு பழமையான கோவில்கள் அழியும் நிலையில் உள்ளன.
பருவ நிலை மாற்றம் காரணமாகவும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் வேகமாக அழிந்து வருகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் பிறவற்றை கற்பதற்கு காட்டும் ஆர்வத்தை தம் வரலாறு கற்க காட்டுவதில்லை.தம் வரலாறு அறியாத எந்தவொரு இனமும் சிறந்து விளங்கியது கிடையாது.
தஞ்சாவூர் இராஜராஜேஸ்வரத்தை கட்டியது யார் என்பது 19ம் நூற்றாண்டு வரை தெரியாது.கல்வெட்டு கொண்டே அதை அறிந்தனர்.
பண்டைய தமிழகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள இன்றியமையாதவையாக இருப்பவை தமிழ் இலக்கியங்கள்.ஒவ்வொரு காலத்திலும் விதவிதமான இலக்கியங்கள் தோன்றிக்கொண்டு தான் இருக்கின்றன
சங்கம் மருவிய காலத்தில் தான் அதிக நீதி நூல்கள் தோன்றின.
அவற்றில் பல முடிமக்கள் காப்பியங்களாகவும் சில குடிமக்கள் காப்பியங்களாகவும் உள்ளன.அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் காலமாற்றத்தினால் நாம் மறந்தவற்றையும் அறிய உதவுகின்றன.
கடற்கொண்ட பூம்புகாரில் இந்திர விழா இருபத்தெட்டு நாட்களுக்கு நடைபெற்றது.பின்னொரு நாளில் விழா நடத்த தவறியதால் பூம்புகாரை கடல் கொண்டது.
சிலப்பதிகாரம் -இந்திர விழாவெடுத்த காதை
இராஜராஜசோழனின் பிறந்தநாள் சதய நாளாக இன்று வரை கொண்டாடப்படுகிறது.
இவ்வளவு ஆதாரங்கள் காணப்பெற்றும் கிடைக்கப்பெற்றும் அவை வெளிக்கொணரப்படவில்லை. அவற்றை முறையாக பயன்படுத்தினால் சுமேரிய நாகரிகத்தை விட பழமையான என்றும் இளமையான வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற பெருமையை அடையலாம்.
image
Rajaraja period inscription

பைந்தமிழ் குமரன் 

Tanq: surya anna

0 comments:

Post a Comment