யாருமறியா நேரத்திலே!!

Leave a Comment

யாரோடு யாரிந்து
யாரையெல்லாம்
ஏமாத்தும்
யாருக்கும்தெரியாத
உணர்வுக்குள்
உருவெடுத்துப்
போகுமந்த
ஊர்வலம்….

கடுகதியாய் ஓடுகின்ற
கடிகார முட்களில்
கும்பிட்டுக் குறிவைத்து
யாருமற்ற மூலையில்
யாரோடு யார் நொந்தும்
காத்தாடி போலசையும்
கல் நெஞ்சம்
காட்டும்
குருட்டு வழியில்
நிரப்புகின்ற
காற்றுக்கும் தெரியாமல்

யம்மா யம்மாவென்று
சும்மா சொன்னதெல்லாம்
யார்க் கணக்கில்
நீண்டு போய்
யார் கணக்கில்
பதிவாகும்…..

யாருமறியா நேரத்தில்
யமகண்ட ஓரத்தில்
யாருக்கு யார் சொல்லி
யார் யாரெல்லாம்
வந்திருந்தும்
யார் பெற்ற பிள்ளையென்று
ஊர் சேர்ந்து
ஓலமிட்டு
ஊர்வலமாய் போகுமென்று
யாருக்கும் தெரியாது
நீர் செய்த பாவங்கள்…

யாவருக்கும் தெரிகின்ற
பூவாடைப் பாடையில்
மாலைக்குள் மறையும்
பூச்சொரிந்த வேளையில்
கூடவே
துணையாகிப் பயணிக்கும்
கூட்டிச் சேர்க்க
அகம் சென்ற
முரண்பட்ட பாதைகள்….

அருள் நிலா வாசன்

0 comments:

Post a Comment