பிரமி(ப்புக்கு)ள்!

Leave a Comment
'சிறகில் இருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச்செல்கிறது!!'
-தர்மூ சிவராமு (பிரமிள்)
பிரமிள் என்பது 'பிரமிப்புக்குள்' என்பதன் ஆகத் தெரிந்த சுருக்கமாக இருக்கும்! புதுமைப்பித்தனுக்குப் பிறகான நவீன தமிழ் கவிதைகளின் பாரத்தை தோள்மேல் தூக்கிக்கொண்ட இவர் ஒரு இலங்கைத் தமிழர்!
இந்தக் கவிதைக்கு யாரெல்லாம் அர்த்தம் சொல்லப் போகிறீர்கள்?! 2 வரிகளில் ஒரு நூறு வலிகளை எளிமையாகவும், பூடகமாகவும் சொல்ல முடியுமா?!
சிறகிற்கும், இறகிற்கும், காற்றிற்குமான காதல் யாரால் உணர்ந்துவிட முடியும்? பறவையின் சிறகிலிருந்து பிரிந்த இறகுக்கும் பறக்கும் சக்தியும், உயிரும் இருப்பதை எத்தனை பேரால் உணர முடியும்? அது கீழ் விழும் வரையிலான காலப் பெருவெளியில் தன் காதலையும், காற்றின் மேல் கொண்ட பற்றையும் தானே காற்றை காகிதமென பாவித்து தன் சுய துக்கங்களையும், வலிகளையும் பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பமென பார்க்க எத்தனை பேரால் முடியும்? காற்றின் வாசனையையும், அதன் லாவகங்களையும் உணர்ந்து பறந்து திரிந்த நினைவுகளை மொத்தமாக, பக்கங்கள் தீராத காற்றிடமே சொல்வதை புரியவைக்க யாரால் முடியும்??
'காதல் கொண்டேன்' படத்தின் கடைசி நிமிடங்களில் வினோத் திவ்யாவின் கண்களிடம் பேசிவிட்டு, அந்த பார்வைகளில் சந்தோஷத்தையும், துக்கத்தையும் பார்வைகளில் எழுதிச் செல்வதைப் போன்ற ஒரு உணர்வு!
உணர்வுகளில் ஒரு கவிஞன் எப்படி பரிணமிக்கிறான்; ஒரு இயக்குனர் எப்படி பரிணமிக்கிறான் என்பது எப்பொழுதுமே வியப்பு தான்!!
பிரமி(ப்புக்கு)ள்!!

0 comments:

Post a Comment