ஒரு தடவை எனக்காக

Leave a Comment
சாத்தி வைத்த
யன்னலுக்குள்
சரசரத்த
உன் நினைப்பு
இழுத்து வைத்து
என் கன்னத்தில்
ஏக்கமாய் கொஞ்சியது…
அந்த ஒரு
நொடிப்பொழுதில்
என் சத்தம்
உன் பக்கத்தில்
வரவில்லையென்று
உன் நெஞ்சில்
வருத்தம்….
உன்னசைவில்
நானிருக்க
உன்னோடு
தானிருக்க
என்னை
விட்டுப்போய்
தூரமாகி
இருந்தாலும்
இன்னும் விடைதேடும்
பயணத்தில்
விடாமல் துடிக்கும்
என் இதயத்தில்
எப்பொழுதும்
கேட்கின்ற
ஏக்கத்தின்…..ஓசை
உன் காதில்
கேட்கவில்லை…
ஒரு தடவை
எனக்காக
மறுபடியும்
உனக்காக
என் சுவாசக்
காற்றாக
கலக்கின்ற வேளை..
என் பக்கத்தில்
இல்லாத
பகலும் இரவும்
பக்கம் பக்கமாய்
உன்னைப் படிக்கத்
தூண்டும்
என் விழிகளுக்குள்
தூங்கிக்கொண்டிருக்கும்
உன்னை
நான் எழுப்புவதேயில்லை
உன் விழியாக
நானிருந்தால்
உனக்குள்ளும்
நானிருப்பேன்
அருள் நிலா வாசன்

image

0 comments:

Post a Comment