எதிர்பார்ப்புகள் நியாயம் ஆகுமா?

Leave a Comment
எதிர்பார்ப்புகள் நியாயம் ஆகுமா?
இருபது நூற்றாண்டுகளை கடந்து மனித தலைமுறை வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனிதனின் எதிர்பார்ப்புகள் சிறு பிசிறு கூட குறைவின்றி அதிகரித்துக்கொண்டே செல்கின்றன 


பொதுவாக ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதேனும் ஒரு வகை எதிர்பார்ப்புகள் அணையா தீபத்தைப் போல சுடர்விட்டு எரிந்துகொண்டே இருக்கும்.அது பெரியதோ சிறியதோ அதை தூபம் போட்டு வளர்ப்பதற்கென்றே சிலர் இருப்பர் 


பலர் எதிர்பார்ப்புகளையும் ஆசையையும் ஒப்பிட்டுப் பார்த்து தம்மைத் தாமே குழப்பிக்கொள்கின்றனர். எதிர்பார்ப்புகளும் சில நேரங்களில் ஆசை வகையறாவை சேர்ந்ததாகவே இருக்கிறது. 


பின் வருவனவற்றை நோக்குங்கள் 


ஒரு பெற்றோர் தம் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கின்றனர்? 
தம் சந்ததியினர் நோய் நோடியற்று நீண்ட காலம் பெரும் புகழுடன் விளங்க வேண்டும் என கருதுகின்றனர். இன்றைய பெற்றோரின் பள்ளி செல்லுந் தம் குழவிகள் ஏனையோரைக் காட்டிலும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகின்றனர்.இது எவ்வகையைச் சார்ந்தது? 
படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் சரி! தம் மக்கள் சிறப்புடன் விளங்க வேண்டும் சரி! அது என்ன ஏனையோரினும் சிறந்தோன்? 
இதில் ஒரு வகை தன்னலம் கருதாத தன்னலத்தைக் காண்கிறோமல்லவா(?)! 


ஒரு விவசாயி எதை எதிர்பார்க்கிறான்? 
நாள் முழுவதும் வியர்வை சிந்தி,தன் பயிர்களின் விளைச்சலுக்காக ஒரு உழவன் உழைக்கின்றான் என்றால் அதில் இரண்டு காரணங்கள் மேலோங்கி நிற்கின்றன.ஒன்று நேரடியானது மற்றையது இலை மறைவு காய் போன்றது. 
அவன் பாடுபட்டு உழைக்கிறான்,அதனால் அவன் பொருளீட்டுகிறான்.தன் குடும்பத்தேவையை நிறைவேற்றுகின்றான் என்பது மற்றையோர் கூற்று. ஆனால் அந்த உழைப்பில் தான் நாளைய உலகமே உண்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. 
இதில் ஒரு தன்னலமிக்க பொதுநலம் உள்ளதல்லவா!(தானியங்களை பதுக்குவோர் அல்ல) 
தன் நிலத்தின் விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என கருதுவது எவ்வகை எதிர்பார்ப்பு? 


மாநிலம் அல்லது நாடு தழுவிய அளவில் நடை பெறும் விளையாட்டு போட்டிகளின் போது ஒரு சிலர் தமது இனம்,ஊர்,மாநிலத்தைச் சேர்ந்தோரே வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.இன்னும் ஒரு சிலர் யார் வெற்றி பெற்றால் என்ன? அனைவரும் நம்மவர் தானே! திறமையுள்ளோர் வெற்றி பெறட்டுமே என்கின்றனர்.இதை என்னவென்று கூறுவது? 


இன்னும் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இவற்றை எந்த வகையில் சேர்ப்பதேன்றே தெரியவில்லை (தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்) .தனது இனம்,மதம், பிரிவு மட்டுமே நீடித்து வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஏனையவர்கள் ஒழிந்தால் நல்லது என கருதுகிறார்கள்[எங்கேயோ படித்தது போல் உள்ளதா?].இதை என்னவென்று கூற? 


எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான எதிர்பார்ப்பு ஒன்றும் உண்டு.நான் இப்பதிவை எழுதியதன் நோக்கமும் அதுவே.மாணவரிடத்தில் ஆசிரியரும் ஆசிரியரிடத்தில் மாணவரும் கொள்ளும் எதிர்பார்ப்பு.ஒரு ஆசிரியர் நன்முறையில் கற்பிக்க வேண்டும் என மாணவன் எதிர்பார்க்கலாம்.மாணவன் தான் கற்பித்தவற்றை தேர்ச்சியுடன் கற்று புலமையுடன் விளங்க வேண்டும் என எதிர்பார்க்கலாம் (எதிர்பார்ப்பார்கள்) .சூழ்நிலைகள் எப்போதும் ஒன்றாக அமையாது.கற்ற கல்வி சில பல இடங்களில் பயனற்று போகலாம்.சிறிது மடமையால் தேர்வை சரியின்றி எழுதலாம்.அதற்காக ஏளனபடுத்துவது சரியாகாது. 




0 comments:

Post a Comment