மனித குலம் சஞ்சரித்த நாள் முதலே வாழ்வில் போராட்டங்களும் துவங்கி விடுகின்றன.ஏழைகளின் வாழ்வியல் போராட்டங்கள் கடுமையானதாக உள்ளன.வசதிமிக்கோர் வாழ்வில் போராட்டங்கள் பொழுதுபோக்காக மட்டுமே உள்ளது.
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது பரவலாக உலவி வரும் ஒரு கூற்று.படைத்தவன் அனைவரையும் ஒரே தகுதியில் தான் படைத்தானா? ஒருவேளை ஒரே தகுதியில் தான் படைதெதிருப்பான். நம்மவர்கள் தான் பாகுபாடை தோற்றுவித்திருப்பார்கள்.
வசதி மிக்கோர் தம் விருப்பங்களை.போராட்டமின்றி பெறுகின்றனர்.ஒரு வேளை சிறு போராட்டங்கள் மறைந்திருக்கலாம். பண போராட்டமாக கூட அது இருக்கலாம். அடிப்படை உரிமைகளை பெறுதல் அனைவரின் உரிமை.எங்கு அடிப்படை உரிமைகளை பெறுவதற்கே போராட்டங்கள் தேவைப்படுகிறதோ அங்கு ஜன நாயகத்திற்கே தகுதியற்ற இடம்.அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது அதை பெற்றுத்தருவது வலியவர்களின் கடமையாயிருத்தல் வேண்டும்
ஒவ்வொரு தனிமனித போராட்டங்களும் மாபெரும் சக்தியை வெளிக்கொணர வல்லது. அவைகள் ஒன்றிணைந்தால் அதன் முன் எந்த ஒரு வல்லரசும் நிலைக்க முடியாது. ஆனால் அதை வெளிக்கொணர தேவையான வழி தான் நம்மவர்களுக்கு தெரிவதில்லை
மக்கள் போராட்டங்களை புரட்சி என்றும் கூறுவது உண்டு.புரட்சியால் அதிகாரம் பொற்றோர் பலரின் வரலாறு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. புரட்சியை ஏளனமாக நினைத்தவர்கள் பின்னர் துன்புற நேர்ந்தது.
மக்கள் விரோத ஆட்சி புரிந்த நந்தர்களை வீழ்த்தி சந்திர குப்த மௌரியர் பரந்து விரிந்த மௌரியப் பேரரசை ஸ்தாபித்தார்.கொடுங்கோல் ஆட்சி புரிந்த களப்பிரரை வீழ்த்த சிம்ம விஷ்ணுவும் கடுங்கோனும் தோன்றினர்.மக்கள் நலனில் நாட்டமின்றி வாரிசு போட்டியில் இறங்கிய சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் பாண்டிய குலத்தையே அழிவுக்கு இட்டுச் சென்றனர்.பிரெஞ்சுப் புரட்சி மூலம் நெப்போலியன் பிரான்சை கைப்பற்றினார்.
நம் நாட்டிலும் ஆங்காங்கே புரட்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அதன் வீரியம் வெளித் தெரிவதில்லை.தில்லியில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் நாடு முழுவதும் ஆதரவு குவிகிறது.நிர்பயாவிற்காக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போராட்டம் நடைபெறுகிறது.போராட்டம் பரவுவதற்கு சமூக வலைதளங்களும் காரணம். அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினால் அது பகட்டு போராட்டம் என கூறுகின்றனர். ஒரு அரசியல்வாதி சிறை சென்றால் ஒரு நடிகன் சிறை சென்றால் கொதித்தெழும் சமூகம் இருபது அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது வாய் பொத்தி நின்றிருந்தது.அதற்கான போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருந்தால் இழந்த உயிர்களுக்கான நியாயம் பெற்றிருக்கலாம்
பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி
பொன் கார்த்திகேயன்
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
0 comments:
Post a Comment