பால்கோவா லாவா

Leave a Comment
பால்கோவா லாவா:- "கேண்டி கிரஷ் உன் மீது ஆட, என் விரல் உன் நெஞ்சில் ஓட, மிட்டாய்க் கடைக்குள் புகுந்த எறும்பைப் போல நானும் இங்கு, உன்னில் ஊர்கிறேன் ஒட்டுமொத்தமாய்; தித்திக்கிறாய் நீ பூவின் ரத்தமாய்!" 2014ன் ஆகச் சிறந்த பாடல் வரிகளாக என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் 'காதல் கஸாட்டா' பாடலைத்தான் தேர்ந்தெடுப்பேன். மதன் கார்க்கி தித்திப்பைக் கொண்டே எழுதிய திகட்டாத பாடல் அது. 2014ஆம் ஆண்டு 33படங்களுக்கு 82 பாடல்களை எழுதிவிட்டார் மதன் கார்க்கி. பொதுவாக நா.முத்துக்குமார் தான் அதிகமாக பாடல்களை எழுதுவார். காதல் கஸாட்டா வின் ஒவ்வொரு வரியிலும் ரசனை கொப்பளிக்கிறது. அது பேரின்பத் தித்திப்பாக இருக்கிறது. 'சாக்குலேட் சிற்பமொன்று முத்தம் கேட்டு நிற்குதின்று' எல்லாம் தேன் போன்ற உவமை. மதன் கார்க்கி இரட்டை அர்த்த வசனங்கள் வரும் பாடலைக் கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் எழுத மாட்டேன் என்ற கொள்கையில் நிற்பவர். சில சமயம் அது பாடலாசிரியர்களுக்கே தெரியாமல் வந்து விழுமோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் இந்த உவமையின் திணிப்பை மதன் கார்க்கி வேறு ஏதேனும் காட்ட எத்தனித்தாரோ என்பதும் எனக்குக் குழப்பம் தான். தோழி ஒருத்தியிடம் இந்த 'பால்கோவா லாவா; பொங்கட்டும் வா வா!' வரிகளைக் கூறிக் கேட்டேன். "அதெப்படி டா உனக்கு மட்டும் இப்டியெல்லாம் தோணுது?", என்று சென்றுவிட்டாள். திருப்பிப் பேசு'லாவா' என்பது சந்தேகம் தான்!


கருவாப்பய - பாலகுருநாதன்

0 comments:

Post a Comment